எங்கள் நிறுவனம் பற்றி
தமிழ் மூலம் ஒரு மொழியைக் கற்பதற்கான விவரங்களை அனுப்புமாறு எங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மொழிகளில் சில நூறு பேர் உங்களைப் போன்ற செய்திகளை எங்களுக்கு அனுப்புகிறார்கள். நாங்கள் சென்னையில் இருப்போம். எங்கள் விவரங்களைச் சொல்வதற்கு முன், எங்கள் நிறுவனத்தைப் பற்றி 4 வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
எங்கள் KVR நிறுவனம் 1990 இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, பெங்காலி, ஒரியா, மராத்தி போன்ற பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாடம் கற்பித்துள்ளோம். அதே வரிசையில் இப்போது தமிழ் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலத்துடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்றுத் தருகிறோம். அதேபோல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளை மற்ற மொழிகளுக்கு அவர்களின் தாய்மொழி மூலம் கற்பிக்கிறோம்.
இத்தனை லட்சம் பேர் எங்கள் நிறுவனத்தில் சேரக் காரணம் நாங்கள் சொல்லும் எளிதான முறைகள்தான். எங்கள் நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால், கொள்கைகள் மூலம் எவரும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். இந்த நாளில், இந்தியாவில் உள்ள பல இலட்சம் மக்களுக்கு பல மொழிகள் மூலம் சொல்லிக் கொடுத்துள்ளோம் என்பதை பெருமையாக கூறுகிறோம். இன்று, நம் மூலம், பல லட்சம் பேர் பல மொழிகளைக் கற்று, தங்கள் மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர். எங்கள் நிறுவனம் மூலம் பல லட்சம் மாணவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
————————————————————————
எங்கள் Course பற்றி
இதற்கு முன்பு நாங்கள் எல்லா மொழிகளிலும் டி.வி.டி. மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி எல்லோரும் “வாட்ஸ் அப்” மூலம் எல்லா வீடியோக்களையும் அனுப்புமாறு கேட்கிறார்கள். இன்னும் சிலர் எல்லா வீடியோக்களையும் இ-மெயில் மூலம் அனுப்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை “டவுன்லோடு செய்து கொள்கிறோம் எனக் கேட்கிறார்கள். சில சமயங்களில் “வாட்ஸ் அப்” சரிவர எடுக்கமுடியாமல் தவறு ஏற்படுகிறது. ஆனால் இ-மெயிலில் “பேக் அப்” இருப்பதால் நீங்கள் அனுப்பும் வீடியோக்கள் நல்ல முறையில் பாதுகாப்பாக சேமிக்க முடிகிறது. இவ்வாறு எல்லோரும் கேட்டுக் கொண்டதன்பேரில் நாங்களும் அவ்வாறே அனுப்பிவைக்க முடிவு செய்திருக்கிறோம். எனவே எங்களுக்கு தங்கள் இ-மெயில் முகவரியை அனுப்பினால் எங்களது வீடியோக்களை அதன் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
————————————————————————
உங்களுக்கு பொதுவாக இருக்கும் சந்தேகங்கள்
கே. வாட்ஸ் அப் – க்கு அனுப்பியவை இ-மெயில் – க்கு அனுப்பியவை எல்லாம் ஒன்றே தானா?
பதில்: ஆமாம். வாட்ஸ் அப்-க்கு அனுப்பியவை இ – மெயில் – க்கு அனுப்பியவை எல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு
வாட்ஸ் அப்பில் தகவல்கள் அழிந்துபோகும் பட்சத்தில் நீங்கள் எங்களைச் சார்ந்திராமல் இ – மெயிலிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இ – மெயிலில் இருப்பவை பேக் அப் என்று கருதுங்கள். உங்களுக்கு
எதிர்காலத்தில் எந்தவித கஷ்டமும் இருக்கக் கூடாது என்பதற்காக அவ்வாறு அனுப்பியுள்ளோம்.
கே. வாட்ஸ் அப்-ல் அனுப்பிய வீடியோ இணைப்பை கிளிக் செய்தால் அவை யு டியூப்ல் ப்ளே ஆகின்றன. நாங்கள் பணம் கட்டி வாங்கியதனால் எங்களுக்கு லாபம் என்ன? நாங்கள் யுடியூப்-லேயே பார்த்துக் கொள்ளலாமல்லவா?
பதில் – நிறைய பேருக்கு இந்த சந்தேகம் சகஜமாக உண்டாகிறது. ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எங்களிடம் உள்ள எல்லா வீடியோக்களையும் எங்கள் யு டியூப் அக்கௌண்ட்டில் பேக் அப் வைத்திருக்கிறோம். சில வீடியோக்கள் எல்லோரும் பார்க்கும்படி பப்ளிக் – காக போட்டிருக்கிறோம். முக்கியமான வீடியோக்களை பிரைவேட் ஆக போட்டிருக்கிறோம். இப்படி பிரைவேட் ஆக போட்ட வீடியோக்களை பாஸ்வேர்ட் போட்டால்தான் பார்க்க முடியும். உதாரணத்திற்கு present tense video வீடியோ எல்லோரும் காணும்படியாக போட்டிருக்கிறோம். Past tense video மற்றும் future tense video பிரைவேட்டாக போட்டிருக்கிறோம். இவை இரண்டையும் பாஸ்வேர்ட் மூலமாகத்தான் திறந்து பார்க்க முடியும்.
கே. தினமும் எவ்வளவு நேரம் வீடியோக்களை பார்க்க வேண்டும்?
பதில் – தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் பார்த்தால் போதுமானது. நீங்கள் விரைவிலேயே கற்றுக் கொள்ளவேண்டும் என்று தினமும் காலையில் ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பாருங்கள்.
கே. இ-புக்கை எப்படி படிக்க வேண்டும்? பதில் – நீங்கள் மிகவும் குறைவாக படித்திருந்தால், இ-புக்கை முழுவதுமாக சிரத்தையுடன் தினமும் படியுங்கள். நீங்கள்
அதிகமாக படித்தவரானால் இ-புக்கை கேஷ்வல் ஆக படியுங்கள். ஆனால் மிகுந்த கவனத்துடன் படிக்காமல்
வீடியோக்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
கே. வீடியோக்களை எவ்வளவு தடவை பார்க்க வேண்டும்?
பதில் – ஒரு தடவை எல்லா வீடியோக்களையும் பார்த்து பின்பு மறுபடியும் எல்லா வீடியோக்களையும் பார்த்து இவ்வாறு மூன்று முறை பார்த்தால் அந்தப் பாடத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்த மாதிரி ஆகும். உங்களுக்குப் பிடித்த ஹீரோ சினிமா என்றால் ஒரு தடவை பார்த்தால் போதுமானது. மறுபடியும் இன்னொரு முறை பார்த்தால் பின் வரும் சீன், அதற்கு பின் வரும் சீன் உங்களுக்கு உடனேயே தெரிந்துவிடும். ஆனால் அந்த வீடியோக்களை சினிமா பார்ப்பதுபோல் இல்லாமல் கவனமாகப் பார்க்க வேண்டும். அதனால்தான் மூன்று முறை பார்க்கச் சொன்னேன். அவ்வாறு பார்த்தால்தான் பாடத்திட்டங்கள் முழுவதும் நிறைவு செய்தாற்போல் ஆகும்.
கே. எங்களுக்கு சந்தேகம் வந்தால் என்ன செய்யவேண்டும்?
பதில் – நாங்கள் பாடத்திட்டத்தில் கூடியமட்டும் எந்த விதமான சந்தேகமும் வராமல் தயார் செய்திருக்கிறோம். அப்படி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் வாட்ஸ் அப் மூலம் உங்களது சந்தேகங்களை அனுப்பலாம். எங்களுக்கு நேரமிருந்தால் உங்களது சந்தேகத்தை தீர்க்கிறோம். நீங்கள் உங்களுக்கு வரும் சந்தேகங்களை மொத்தமாக எங்களுக்கு அனுப்பவும். பலர் தமிழில் எழுதி அதற்கான பதிலை ஆங்கிலத்தில் அனுப்பச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ஆங்கிலத்தில் சந்தேகங்களை எழுதி அதனை தமிழ் பதில் அனுப்பச் சொல்கிறார்கள். இவ்வாறு செய்தீர்களானால் உங்களுக்கு ஆங்கிலம் வரவே வராது. எனவே ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் சந்தேகங்களை எழுதி அனுப்புங்கள். அதில் எவ்வளவு தப்புகள் இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் அதனை திருத்தி சரி செய்து அனுப்புகிறோம். அப்பொழுதுதான் நீங்கள் வெகு சீக்கிரத்தில் ஆங்கிலம் கற்கலாம். அப்பொழுது தான் நீங்கள் ஆங்கிலம் கற்பதில் முயற்சி எடுத்ததாக ஆகும்.
இன்னொரு முக்கியமான விஷயம் கூட நான் கவனித்தேன். நீங்கள் வீடியோக்களை பார்க்கும்போது எங்கேயாவது புரியவில்லை என்றால் அப்படியே நிறுத்திவிட வேண்டாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே செல்லுங்கள். எங்கேயாவது ஒரு இடத்தில் உங்களுக்கு புரியும். தினசரி வாழ்க்கையில் எந்த விஷயமானாலும் புரியாத விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டாம். புரியாத விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டிருந்தால் உங்களுடைய முன்னேற்றம் அங்கேயே நின்றுபோய் விடும்.
————————————————————————



————————————————————————
Course Payment Method Details
நீங்கள் இன்றே பாடத்திட்டத்தில் சேர விரும்பினால் Payment PayTM அல்லது PhonePE அல்லது GooglePay (தொலைபேசி எண். 9789099589) மூலம் கட்டணத்தை அனுப்பவும். நீங்கள் அனுப்பிய பேமெண்ட் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பவும். அதன் பிறகு உங்கள் ஜிமெயில் கணக்கை அனுப்பவும். இந்த வாய்ப்பு மீண்டும் வராது. ஒவ்வொரு மொழிக்கும் ரூ.1575/-கள் மட்டுமே. சாதாரண நாட்களில் ரூ.3150/-. இப்போது இந்த சலுகையில் ரூ.1575/-கள் மட்டுமே.
முழு விவரங்களையும் அனுப்பியுள்ளோம். இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மெசேஜ் அனுப்பவும்.
————————————————————————
